நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-03-22 20:34 GMT
நெல்லை, மார்ச்:
நெல்லையை அடுத்த நாரணம்மாள்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 7-வார்டு அருணாசலம் நகரை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்களது ஊரில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் அங்கு முறையான வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் ஊரில் முறையாக வாறுகால் வசதி அமைத்துத் தரவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்