பாதை கேட்டு போராட்டம்

அறந்தாங்கி அருகே பாதை கேட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2021-03-22 20:13 GMT
அறந்தாங்கி, மார்ச்.23-
அறந்தாங்கி அருகே காடை இடையாத்தூர் கிராமத்தில் இருதரப்பினர் இடையே பாதை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில்  நேற்று முன்தினம் ஒரு தரப்பினர் பாதையை அடைத்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு தரப்பினர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் பாதை அடைக்கப்பட்டு உள்ளது. வீட்டிற்கு செல்ல வழி இல்லை என கூறி அறந்தாங்கி சப்-கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், தாசில்தார்கள் மார்டின் லூதர் கிங், ஜமுனா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது தொடர்பாக அறந்தாங்கி போலீசார் மாம்பழத்திவயலை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்