நெல்லையில் இருந்து தேர்தல் தொடர்பான விண்ணப்பங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் தொடர்பான விண்ணப்பங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2021-03-22 20:13 GMT
நெல்லை, மார்ச்:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி, அம்பை ஆகிய 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மேற்கண்ட தொகுதிகளுக்கு தேவையான தேர்தல் தொடர்பான விண்ணப்பங்கள் ஏற்கனவே சென்னையில் இருந்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தன.நேற்று 2-வது முறையாக சென்னையில் இருந்து லாரி மூலம் விண்ணப்பங்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தன. அவற்றை ஊழியர்கள் தனித்தனியாக பிரித்து தொகுதி வாரியாக விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்