விழிப்புணர்வு கையேடு வெளியீடு

விழிப்புணர்வு கையேடு வெளியீடு வெளியிடப்பட்டது

Update: 2021-03-22 20:03 GMT
சிவகாசி,மார்ச்.
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கடந்த மாதம் சாத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 30 பேர் பரிதாபமாக இறந்தனர். போதிய பயிற்சியின்மை மற்றும் கவனக் குறைவால் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சிவகாசியில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் நேற்று காலை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு அதிகாரி சுந்தரேசன் கலந்து கொண்டு பாதுகாப்பாக பட்டாசுகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பட்டாசு ஆலை அதிபர்களை வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பட்டாசு உற்பத்தியில் பாதுகாப்பு அவசியம் என்ற விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது. இதை  டான்பாமா தலைவர் கணேசன் பஞ்சுராஜன், அசோக் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்