திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 54 பேர் போட்டியிடுகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 54 பேர் போட்டியிடுகின்றனர்.

Update: 2021-03-22 19:27 GMT
திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். 
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் யாரும் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. அதைத்தொடர்ந்து போட்டியிடும் 13 வேட்பாளர்களின் பெயரும், சின்னமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-

1.கோ.செந்தில்குமார் - அ.தி.மு.க. (இரட்டை இலை) 2.தா.ராமு- பகுஜன் சமாஜ் கட்சி (யானை), 3.ஆர்.சேகர் - அகில இந்திய இளைஞர் முன்னேற்ற கட்சி (கப் அன்ட் சாசர்), 4.எம்.ஞானதாஸ் - மக்கள் நீதி மய்யம் (டார்ச் லைட்), 5.ஜா.தேவேந்திரன் - நாம் தமிழர் (கரும்பு விவசாயி), 6.என்.முகமது நயீம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஏணி), 7.டி,எஸ்.வக்கீல்அஹமத் - ஏ.ஐ.எம்.ஐ.எம். (பட்டம்), 8.ஜெகன் - அகில பாரத இந்து மகாசபா (தென்னந்தோப்பு), 9.அப்துல் வாஹித் - சுயேச்சை (டைமண்ட்) 10.மு.சுரேஷ் - சுயே. (பிரஷர் குக்கர்), 11.சையது முகமது சலீம் - சுயே. (பீரோ), 12.டில்லிராஜி - சுயே. (வெப் கேமரா) 13.சி.எம்.முஹம்மத் உசேன் - சுயே.. (கால்பந்து)

ஆம்பூர்

ஆம்பூர் தொகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 15 பேரின் வேட்புமனுக்களில் 2 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். அதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 13 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1.கே.நஜர்முஹமத் - அ.தி.மு.க. (இரட்டை இலை) 2.ஜே.வஜிர்அஹமத் -பகுஜன் சமாஜ் (யானை) 3.அ.செ.வில்வநாதன் - தி.மு.க. (உதயசூரியன்) 4.அசோக்குமார் - அனைத்து மக்கள் புரட்சி கட்சி (கண்ணாடி தம்ளர்) 5.உமர்பாரூக் - எஸ்.டி.பி.ஐ. (பிரஷர் குக்கர்), 6.கரீம்பாஷா -ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் (ஷூ) 7.பார்த்திபன்- ஆல் இந்திய யூத் டெவலப்மெண்ட் பார்ட்டி (கப் மற்றும் சாஸர்) 8.மணி - அனைத்து ஓய்வூதியர்கள் கட்சி (தொப்பி), 9.மெஹருன்னிசா - நாம் தமிழர் கட்சி (கரும்பு விவசாயி), 10.ராஜா - மக்கள் நீதி மய்யம் (டார்ச் லைட்), 11.முருகன் - சுயேச்சை (டிராக்டர் இயக்கும் உழவன்), 12. ரஜினிகாந்த் - சுயே.(ஆட்டோ ரிக்‌ஷா), 13. ஜார்ஜ் - சுயே. (வளையல்கள்)

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை தொகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 16 பேரின் வேட்பு மனுக்களில் 3 பேர் வாபஸ் பெற்றனர். அதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
1.கே.சி.வீரமணி - அ.தி.மு.க. (இரட்டை இலை), 2.க.தேவராஜி - தி.மு.க. (உதயசூரியன்) 3.வி.சி.சிவக்குமார் - பகுஜன் சமாஜ் (யானை), 4.எஸ்.காளஸ்திரி - அகில இந்திய உழவர்கள் உழைப்பாளர்கள் கட்சி (தென்னந்தோப்பு) 5.ஆ.சிவா - நாம் தமிழர் கட்சி (கரும்பு விவசாயி), 6.தென்னரசு சாம்ராஜ் - அ.ம.மு.க. (பிரஷர் குக்கர்), 7.ஆர்.கருணாநிதி - சுயேச்சை (மின்கல விளக்கு)
8.இரா.தேவராஜி - சுயே. (காலிபிளவர்) 9.வி.கே.தேவராஜி - சுயே.(ரொட்டி சுடும் கருவி), 10. மணிதண் - சுயே. (மோதிரம்), 11.அ.வீரமணி - சுயே. (தொலைக்காட்சி பெட்டி), 12.எச்.வீரமணி - சுயே. (பெட்டி) 13சா.வீரமணி - சுயே. (வாயு சிலிண்டர்).

திருப்பத்தூர்

 திருப்பத்தூர் தொகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 17 பேரின் வேட்புமனுக்களில் 2 பேர் வாபஸ் பெறறனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் 15 பேர் உள்ளனர். அதன்விவரம் வருமாறு:-
1.அ.நல்லதம்பி - தி.மு.க. (உதயசூரியன்), 2.டி.கே.ராஜா - பா.ம.க. (மாம்பழம்) 3.எஸ்.காளஸ்திரி - அகில இந்திய உழவர்கள் உழைப்பாளர்கள் கட்சி (தென்னந்தோப்பு) 4.ச.சத்தியமூர்த்தி - மக்கள் நலக் கழகம் (மணியாரம்) 5.ம.சுமதி - நாம் தமிழர் கட்சி (கரும்பு விவசாயி) 6.ஏ.ஞானசேகர் - அ.ம.மு.க. (பிரஷர் குக்கர்) 7.ரோஸ்லின் ஜீவா - சாமானிய மக்கள் கட்சி (ஊன்றுகோல்), 8.ஏ.ஜெயம்மா - அனைத்து மக்கள் புரட்சி கட்சி (கண்ணாடி டம்ளர்), 9.ஆரோக்கிய ஜோபிரபு - சுயே. (ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை), 10.கோவிந்தராஜி - சுயே..(காலிபிளவர்) 11.எம்.நல்லசிவம் - சுயே (வானூர்தி), 12.ஆர்.பழனி - சுயே (ஊசி மற்றும் நூல்) 13.மணிதண் - சுயே (மோதிரம்), 14.ஜி.ராஜா - சுயே (அன்னாசி பழம்), 15விஜயகுமார் - சுயே (மின்கல விளக்கு).

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 54 பேர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். 

மேலும் செய்திகள்