குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்;

Update: 2021-03-22 19:23 GMT
சிவகாசி, மார்ச்
திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட சுக்கிரவார்பட்டி ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சரி செய்யாததால் குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. திருத்தங்கல் நகராட்சி பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில் சுக்கிரவார்பட்டி ரோட்டில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன் வராதது அப்பகுதி மக்களை வேதனையடைய செய்துள்ளது.
எனவே குடிநீரின் முக்கியத்துவம் கருதி குழாய் உடைப்பை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்