நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ்காரர் உள்பட 13 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ்காரர் உள்பட 13 பேருக்கு கொரோனா.
நாமக்கல்,
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 11,933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஒரே நாளில் நாமக்கல் போக்குவரத்து பிரிவு போலீஸ்காரர், டாஸ்மாக் விற்பனையாளர்கள் உள்பட மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,946 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,767 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் இறந்து விட்ட நிலையில், 68 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.