கீழடி அகழாய்வை பார்த்த கல்லூரி மாணவிகள்
கீழடி அகழாய்வு பணிகளை கல்லூரி மாணவிகள் நேரில் பார்த்தனர்.
திருப்புவனம்,
இப்பணிகள் முதலில் கீழடியிலும் பிறகு கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கீழடியில் முதல் குழி தோண்டியபோது பாசி, மணிகள், சில்லுவட்டுகள் மற்றும் பானை ஓடுகள் குவியலாக கிடைத்தது. கொந்தகையில் ஐந்து முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒன்று மூடியுடன் உள்ள முழுமையான முதுமக்கள் தாழியும், மற்றவை சேதமடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. அகரத்தில் குழி தோண்டி அகழ்வாராய்ச்சி பணி நடக்கும்போது பானை ஓடுகள், சேதமடைந்த சிறிய பானைகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து குழி ஆழமாக தோண்டி ஆராய்ச்சி பணிகள் செய்யும் போது நெல் சேகரித்து வைக்கும் தாழிகள் கண்டறியப்பட்டது.இந்தநிலையில் கீழடியில் தற்சமயம் இரண்டாவது குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.சேலத்தில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 15 மாணவிகள், 2 பேராசிரியைகள் தலைமையில் கல்விச் சுற்றுலாவாக மதுரை வந்தனர். அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டு பின்பு தொல்பொருள் அகழ்வாராய்ச்சி குறித்து கேள்விப்பட்டு கீழடிக்கு வந்தனர். இங்கு நடைபெறும் பணிகளை நேரில் பார்வையிட்டனர். மாணவிகளுக்கு தொல்லியல் அலுவலர் 7 கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கீழடியில் கிடைத்த பொருட்களை பற்றி விவரமாக எடுத்துக் கூறினார். பொருட்களை பார்த்த மாணவிகள் பிறகு வேறு இடங்களுக்கு சென்றனர்.