வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டனர்

காரைக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.

Update: 2021-03-22 18:15 GMT
வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டனர்
காரைக்குடி,

காரைக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.

ஆய்வு

காரைக்குடி அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரியில் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களை தேர்தல் பார்வையாளர்கள் சோனாவனே, முத்துக்கிருஷ்ணன் சங்கரநாராயணன், காவல்துறை பார்வையாளர் லீரெசோபோ லோதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தேர்தல் பார்வையாளர்கள் காரைக்குடி அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரதான கட்டிடத்தில் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கும், முருகப்பா கூட்டரங்கில் மானாமதுரை தனி சட்டமன்ற தொகுதிக்கும், அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி கட்டிடத்தில் சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டனர்.
ஒவ்வொரு மையத்திலும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கண்காணிப்பதற்கான இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், கண்காணிப்பு அலுவலர்கள் சென்று வருவதற்கு ஏற்ப தேவையான இடங்கள் என ஒவ்வொன்றையும் தனித்தனியே கேட்டறிந்து  ஆய்வு செய்தனர்.

அறிவுரை

 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகளின் பாதுகாப்பு தன்மை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஒவ்வொரு அறையிலும் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் குறித்த விவரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அலுவலர்களுடன் ஆலோசித்தனர்.
பாதுகாப்பு பணிக்கு தேவையான பணியாளர்கள் தயார் நிலையில் இருந்து கொள்ள அலுவலர்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் அறிவுரை வழங்கினர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லதா, நில அளவை துறை உதவி இயக்குனர் திரவியசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செழியன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அந்தோணி, ஜெயந்தி, மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்