அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு உள்பட 15 வேட்பாளர்கள் போட்டி
சிவகங்கை சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
சிவகங்கை,
சிவகங்கை சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
26 பேர் வேட்பு மனு தாக்கல்
இதில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் குணசேகரன், அ.ம.மு.க. வேட்பாளர் அன்பரசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மல்லிகா, மைஇந்தியா பார்ட்டி வேட்பாளர் பாண்டிமுத்து, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜோசப் உள்பட 26 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். மனு பரிசீலனையில் 26 மனுக்களும் ஏற்றுகொள்ளபட்டன.
மேலும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மல்லிகா, நாம்தமிழர் மாற்று வேட்பாளர் வினோதினி, அ.ம.மு.க. வேட்பாளர் அன்பரசன் ஆகிய 4 பேர் தலா 2 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவர்களின் தலா ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
5 பேர் மனு வாபஸ்
இதைத்தொடர்ந்து மீதியுள்ள 15 பேருக்கு சின்னம் ஒதுக்கும் பணி சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முத்துகழுவன் தலைமையிலும், பொதுபார்வையாளர் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் வேட்பாளர்களுக்கு கீழ்கண்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-
1. பி.ஆர்.செந்தில்நாதன் (அ.தி.மு.க.)- இரட்டை இலை
2.குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு)- தானிய கதிர்களும்,அரிவாளும்
3.அன்பரசன் (அ.ம.மு.க.) -குக்கர்
4.பாண்டிமுத்து (மைஇந்தியா பார்ட்டி)-கண்காணிப்பு கேமரா
5. மல்லிகா(நாம் தமிழர் கட்சி)-கரும்பு விவசாயி
6. வடிவேல்(அனைத்துமக்கள் புரட்சி கட்சி)- கண்ணாடி டம்ளர்
7. ஜோசப் (மக்கள்நீதிமய்யம்)- டார்ச் லைட்
8. கலைச்செல்வம் (சுயே)-ரம்பம்
9. கானிங்பிரபு (சுயே)-பற்பசை
10, ர. குணசேகரன் (சுயே)- புணல்
11. திருக்குமரன் (சுயே)-கால்குலேட்டர்
12. முனைவர் பார்த்தசாரதி (சுயே)-ஆட்டோரிக் ஷா
13. ரவி (சுயே)-செங்கல்
14. விமல்ராஜ் (சுயே)-நீர்தொட்டி
15. விஸ்வநாதன் (சுயே)-ஸ்ேபனர்.