விழுப்புரத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி

விழுப்புரத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-03-22 17:35 GMT
விழுப்புரம், 

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு பணியாளர்களுக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், திண்டிவனம் தொகுதிக்கு திண்டிவனம் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், மயிலம் தொகுதிக்கு மயிலம் பவ்டா கலை அறிவியல் கல்லூரியிலும், வானூர் தொகுதிக்கு வானூர் அரவிந்தர் கலை அறிவியல் கல்லூரியிலும், விக்கிரவாண்டி தொகுதிக்கு விக்கிரவாண்டி புனித மேரிஸ் மெட்ரிக் பள்ளியிலும், திருக்கோவிலூர் தொகுதிக்கு திருக்கோவிலூர் வள்ளியம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலும், செஞ்சி தொகுதிக்கு செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி நடைபெற்றது.

விளக்கம்

இதில் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். வாக்குப்பதிவு எந்திரத்தை கட்டுப்பாட்டு எந்திரத்துடன் இணைப்பது, வி.வி.பேட் எந்திரத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 28-ந் தேதியும், 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு தேர்தலுக்கு முன்பாக ஏப்ரல் 5-ந் தேதியும் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்