ராமநாதபுரம்,
உலகம் முழுவதும் பேராபத்தை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்து வேகமாக பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிப்பு வெகுவாக குறைந்து ஒற்றை எண்ணிக்கையிலேயே இருந்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 505 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 359 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 9 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 137 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.