மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

Update: 2021-03-22 17:26 GMT
மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசிப்பெருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் 10-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். 

தெப்ப உற்சவம்

பிற்பகல் 2.30 மணிக்கு உற்சவ அம்மனை பல்லக்கில் அக்னி குளத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்பு இரவு 9 மணிக்கு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அம்மன் கங்கையம்மன் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்