உடன்குடி மகளிர் அரபிக் கல்லூரியில் ஐம்பெரும் விழா
உடன்குடி மகளிர் அரபிக் கல்லூரியில் ஐம்பெரும் விழா நடந்தது
உடன்குடி:
உடன்குடி பெரிய தெரு இமாம் ஷாபிஈ மகளிர் அரபுக் கல்லூரியில் 20-வது ஆண்டு விழா, 16-வது பட்டளிப்பு, அல் இஸ்லாஹ் கையெழுத்து மாத இதழ் வெளியீடு, லஜ்னதுல் இஸ்லாஹ் மாணவியர் சொற்பயிற்சி மன்ற 490-வது நிறைவு விழா, மற்றும் பல்வகைக் கண்காட்சி தொடக்க விழா ஆகியன ஐம்பெரும் விழாக்கள் 3 நாட்கள் நடந்தது. மார்ச் 19-ம் ஆம் தேதி தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஹாஜா முயினுத்தீன் ஆலீம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது. 20-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸாலிஹாத் டிரஸ்ட் நிர்வாகி ஷாஹூல் ஹமீது தலைமை தாங்கினார். மகளிர் அரபுக் கல்லூரி முதல்வர் ஜஹ்பர் சாதிக் இமாம், சென்னை லஜ்னத்துல் முஹ்ஸினீன் தலைமை இமாம் பஹ்ரூத்தீன் ஆலிம், மேலப்பாளையம் ஆல்-முனீரா அரபுக் கல்லூரி முதல்வர் முஹம்மது மஸ்தான், சென்னை புரசைவாக்கம் தலைமை இமாம் ஷாஹூல் ஹமீது, ஹஸன் அப்துல்ஹாதர் ஆகியோர் முன்னிலையில் அல் இஸ்லாஹ் இதழ் வெளியிடப்பட்டு மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலர் மருத்துவர் அன்வர் பாதுஷா மார்க்க சொற்பொழிவாற்றினார். 21-ம் தேதி காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாலிஹாத் டிரஸ்ட் பொருளாளர் கலிலூர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஷமீம் காசிம், சாலிஹாத் டிரஸ்ட் உறுப்பினர் பக்கீர் முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலையில் மாணவிகளின் நிகழ்ச்சிகள், சென்னை ஜாமி ஈ ஆல் ஹூதா அரபுக் கல்லூரி முதல்வர் மருத்துவர் சதீதுத்தீன் பாஜில் பாகவியின் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு மகளிர் அரபுக் கல்லூரி நிறுவனத் தலைவர் டி.எம். அபூ உபைதா தலைமை தாங்கி, 25 மாணவிகளுக்கு ஆலிமா முஸ்லிஹா ஸனது பட்டங்களையும், தையல், கணினியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். தூத்துக்குடி தென் மாவட்ட ஹாஜிக்கள் அம்ஜத் அலி, முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சிகள், செய்முறை, தமிழ், உருது, அரபு, மலையாளம் கீதம் பாடுதல், கருத்தரங்கம், பட்டம் பெற்ற மாணவிகளின் சிற்றுரைகள், உரையாடல், நாடகம் நடைபெற்றது.ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியைகள், மாணவிகள் செய்திருந்தனர்.