தீப்பெட்டிக்கு கூடுதல் விலைகேட்டு தொழிற்சாலைகள் கதவடைப்பு போட்டம்

தீப்பெட்டிக்கு கூடுதல் விலை கேட்டு தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டம்

Update: 2021-03-22 12:17 GMT
கோவில்பட்டி:
தீப்பெட்டிக்கு கூடுதல் விலைகேட்டு நேற்று முதல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 100-க்கும் மேற்பட்ட எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டம் தொடங்கியது. 31-ந் ேததி வரை போராட்டம் நடக்கிறது
தீ்ப்பெட்டிக்கு கூடுதல் விலை...
தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரி மாவட்ட காவேரிபட்டணம் ஆகிய இடங்களில் சுமார் 400 எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
கடந்த 2 மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான அட்டை, பேப்பர், குச்சி, மெழுகு, குளோரேட் போன்ற மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதே போல், பெட்ரோல், டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் ஆகியவற்றின் உயர்வு காரணமாக லாரி வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தீப்பெட்டியின் அடக்கச்செலவு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், தீப்பெட்டியின் கொள்முதல் அதிகரிக்கப்படவில்லை. 
10 நாள் போராட்டம்
எனவே, மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், நேஷனல் சிறுத்தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மார்ச் 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 10 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
அதன்படி, நேற்று தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. தீப்பெட்டி ஆலைகளை பொறுத்தவரை 90 சதவீதம் பெண்கள் தான் பணியாற்றி வருகின்றனர். மேலும், தீப்பெட்டி பண்டல்கள் அனுப்புவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மட்டுமின்றி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் என 4 லட்சம் பேர் வரை வேலையிழந்துள்ளனர்.
100 தொழிற்சாலைகள் மூடல்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, கடம்பூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் நேற்று மூடப்பட்டன. இதில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்