கழுகுமலை அருகே முதியவரை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி
கழுகுமலை அருகே முதியவரை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி நடந்துள்ளது.
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கே.வெங்கடேஸ்வரபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கும், கடம்பூர் வீரபாண்டி புளியங்குளத்தைச் சேர்ந்த மந்திரம் மகன் ராஜாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ராமசாமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். ்அப்போது அங்கு வந்த ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரும் திடீரென்று அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர். ராமசாமியை தாக்கி, அவரது கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் மற்றும் கழுகுமலை போலீசார் ராமசாமி வீட்டிக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமசாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபாஸ் ஜென்சி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றார்.