கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், காட்டூர் காவல் நிலைய பகுதியில் கொலை மற்றும் வெடிகுண்டு வழக்குகளில் போலீஸ் தேடி வந்த கைதிகளான தர்ஷன் குமார், ராகேஷ் என்பவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதுகுறித்து கோவை ரெயில்வே போலீசுக்கு கேரள போலீசார் தகவல் கொடுத்தனர். ரெயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ரெயில் நிலைய கார் பார்க்கிங் பகுதியில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் திருச்சூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.