தொழிலாளியின் வீட்டில் திருடிய வாலிபர் கைது
தொழிலாளியின் வீட்டில் திருடிய வாலிபர் கைது
கணபதி
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி (வயது40).கூலித் தொழிலாளி.இவர் சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியே செல்வதற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.
வெளியே சென்று திரும்பிய போது வீட்டின் பூட்டியிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.அதிர்ச்சி அடைந்த வேலுமணி உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகை திருட்டுபோயிருப்பது தெரியவந்தது.
உடனடியாக இதுகுறித்து ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்த தங்மணி (27) என்ற வாலிபரை கைது செய்தனர்.