கோவை மற்றும் மேற்கு மண்டலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் நேற்று 56 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை மற்றும் மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, கீதா, முருகாச்சலம், சுலேகா, வீரம்மாள் ஆகியோர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.