தேர்தல் பணியில் ஈடுபடும் 37 ஆயிரம் பேருக்கு தபால் ஓட்டு

தேர்தல் பணியில் ஈடுபடும் 37 ஆயிரம் பேருக்கு தபால் ஓட்டு

Update: 2021-03-22 09:51 GMT
தேர்தல்
கோவை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக் கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 27 ஆயிரம் அரசு ஊழியர் கள் ஈடுபட உள்ளனர். அவர்களில் ஆசிரியர்கள், பல்வேறு துறை அரசு துறை ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ், பி.எஸ்.என்.எல்., சுங்க இலாகா ஊழியர்களும் ஈடுபடுகிறார்கள்.

தேர்தல் பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மண்டல தேர்தல் அதிகாரிகள், நுண் பார்வையாளர்கள், வாக்குச்சாவடி அலுவ லர்கள் என மொத்தம் 27 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள். இவர்கள் தவிர கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 10 ஆயிரம் போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 


தேர்தல் பணியில் ஈடுபடும் 37 ஆயிரம் பேரும்  நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாது என்பதால் தபால் மூலம் ஓட்டு போட வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இன்று (திங்கட்கிழமை) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படு கிறது. அதன்பிறகு வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு தபால் ஓட்டுப் போடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

 அதில் உள்ள ஆவணங் களை பூர்த்தி செய்தும் தபால் ஓட்டுகள் போட்டு கலெக்டர் அலுவல கம் மற்றும் போலீஸ் அலுவலகங்களில் வைக்கும் பெட்டிகளில் போட வேண்டும்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தபால் ஓட்டுகள் இரண்டொரு நாளில் தயாராகி விடும். அவை சம்பந்தப்பட்டவர்களுக்கு வினியோகிக்கப்பட்டு திரும்ப பெறப்படும்.

 வழக்கம் போல தபால் ஓட்டுகள் போடுவதற்கான நடைமுறைகள் எப்படி பின்பற்றப்படுகிறதோ அவை தொடர்ந்து பின்பற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்