சின்னதடாகத்தில் புதிய போலீஸ் நிலையம்
சின்னதடாகத்தில் புதிய போலீஸ் நிலையம்.;
துடியலூர்,
கோவை மாவட்டத்தில் பெரிய போலீஸ் நிலையமாக உள்ள துடியலூரை இரண்டாக பிரித்து சின்னதடாகம் போலீஸ் நிலையம் உருவாக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நஞ்சுண்டபுரம் ஊராட்சியில் வாடகை கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரூ.80.02 லட்சம் மதிப்பில் சின்னதடாகத்தில் புதிய போலீஸ் கட்டிடம் கட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து சின்னதடாகத்தில் புதிய போலீஸ் நிலைய கட்டிடத்தை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. தினகரன் குத்துவிளக்கு ஏற்றி நேற்று திறந்து வைத்தார். அவர், போலீஸ் நிலையத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இதற்கு கோவை சரக டி.ஐ.ஜி. நரேந்திர நாயர் முன்னிலை வகித்தார்.
கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு வரவேற்று பேசினார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் ஸ்ரீனிவாசன், உதவி பொறியாளர் ஜானகிராமன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.