நத்தத்தில் அ.தி.மு.க. வெற்றி உறுதி; வாக்கு வித்தியாசத்தை அறியவே தேர்தல் நத்தம்விசுவநாதன் பேச்சு
நத்தம் தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி, வாக்கு வித்தியாசத்தை அறியவே தேர்தல் நடைபெறுவதாக நத்தம் விசுவநாதன் பேசினார்.
கோபால்பட்டி,
நத்தம் சட்டமன்ற தொகுதி யின் அ.தி.மு.க. வேட்பாளராக 5வது முறையாக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான நத்தம் விசுவநாதன் போட்டி யிடுகிறார். இதையொட்டி நேற்று காலை திறந்த ஜீப்பில் சாணார்பட்டி ஒன்றியத் திலுள்ள கணவாய் பட்டி, திம்மணநல்லூர் ஊராட்சி களின் கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக கணவாய் கருப்புசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு கிராமந்தோறும் மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டு வந்தும், ஆளுயர மாலைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசிதாவது:-
நத்தம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளேன். இந்த தேர்தலிலும் மக்கள் ஆதரவில் அமோக வெற்றி பெறுவது உறுதி. தற்போதய தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க. இடையே வாக்குவித்தியாசத்தை மக்கள் தெரிந்து கொள்ளத்தான் நடை பெறுகிறது.கடந்த கால வாக்கு வித்தியாசத்தைவிட கூடுதல் வித்தியாசத்தில் இம்முறை வெற்றியடைவேன்.
கீதையில் கிருஷ்ண பகவான் கூறியது போல நத்தம் தொகுதியில் வளர்ச்சி பணிகள்,உட்கட்டமைப்பு வசதிகள் என எது நடந்ததோ, எது நடக்கிறதோ எது நடக்க இருக்கிறதோ அத்தனையும் அ.தி.மு.க.வின் ஆட்சி காலத்தில் மட்டும் தான். நான் சாதி, மத பாகுபாடு, வாக்களித்தவர்கள், வாக்கு அளிக்காதவர்கள் என பேதம் பார்ப்பதில்லை கட்சி பாகுபாடு பார்ப்பதில்லை தொகுதியில் அனைத்து மக்களையும் ஒன்றாக நினைத்து தேவையானபணிகளையும், உதவிகளையும் செய்கிறேன்.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குழுவில் நானும் ஒருவன்.அதில் தமிழ்நாட்டு மக்களையும், தாய்மார் களையும் சிந்தித்து அறிவிப்பு களை வெளியிட்டோம். இலவச கியாஸ், அம்மா திருமண சீர்வரிசை, மாதம் ரொக்கம் ரூ.1500, 150 யூனிட் மின்சாரம், வாசிங்மெசின், இலவச கேபிள் என அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும், தொடர்ந்து நிறைவேற்றியும், குடிமராமத்து போன்ற புதிய திட்டங்களை நிறைவேற்றிய நமது முதல மைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தற்போது ரூ.12 ஆயிரத்து500 கோடி மதிப்பிலான பயிர்கடன், மற்றும் 6 சவரன் நகைகடன் களை தள்ளுபடி செய்து விட்டு உங்களிடம் வாக்கு கேட்கிறார்.எதிரணியினர் வந்தால் செய்வதாக கூறி வாக்கு கேட்கின்றனர் தி.மு.க.வினர் தேர்தல் அறிக்கையில் சொன்னதை கடந்த காலங் களில் நிறைவேற்றியதில்லை. அ.தி.மு.க. அரசு தாலிக்கு தங்கம், அம்மா ஸ்கூட்டர் , மிக்சி கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் என அத்தனை அறிவிப்பையும் நிறைவேற்றி யுள்ளது. என விசுவநாதன் பேசினார். தொடர்ந்து கண வாய்பட்டி, சக்கிலியன் கொடை, கொர சினம்பட்டி, பங்களா, கே.குரும்பபட்டி, வடுகபட்டி, தலையாரிபட்டி, ஜோத்தாம்பட்டி, மணிய காரன்பட்டி, ராமராஜபுரம், பாறைபட்டி, பள்ள பட்டி,மந்தநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலா ளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான ஆர்.வி.என்.கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் வி.சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கே.சுப்பிரமணி,பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ்,கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளர் இளம் வழுதி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ்பாபு, ஹரிஹரன், சுப்புத்தாய்பிச்சை, கண்ணன், பாஜக மாவட்ட தலைவர் தனபால்,ஒன்றிய தலைவர் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் பெருமாள்,பாமக மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி உள்ளிட்ட அதிமுக கூட்டணி மாவட்ட, ஒன்றிய , கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் திரளாக பங்கேற்றனர்.
மேலும் அ.ம.மு.க., தே.மு.தி.க.வைச்சேர்ந்த பலரும் பிரசாரத்தின் போது நத்தம் விசுவநாதன் முன்னிலையில் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.