கன்னங்குறிச்சியில் மாடு திருடிய 2 பேர் கைது

கன்னங்குறிச்சியில் மாடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-03-17 23:59 GMT
கன்னங்குறிச்சி:
கன்னங்குறிச்சி மூக்கனேரி காட்டு வளவு பகுதியைச் சேர்ந்தவர் தேவி பிரித்தா. இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் கட்டி வைத்து இருந்த பசுமாடு ஒன்று காணாமல் போனது. இதனை அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததினால் இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் பசுமாட்டை தேடிவந்த நிலையில் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாபு (வயது 28), சதீஷ்குமார் (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து மாட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கன்னங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்