சேலத்தில் மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்- தொழிலாளி கைது
சேலத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அய்யப்பன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீராணம் பகுதியில் குடியேறினார். அப்போது அவருக்கும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த பெண்ணை அய்யப்பன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர் அம்மாபேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.