கல்லூரி மாணவர்களுக்கு கலைப்போட்டி
பனவடலிசத்திரம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கலைப்போட்டி நடந்தது.
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் இடையே கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பெண்களுக்கு கோலப் போட்டிகள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் தலைமை தாங்கினார். நடுவர்களாக தமிழ்த்துறை தலைவர் கருப்பசாமி, தமிழ் பேராசிரியர்கள் ஹரிஹரன், ஜாய் சாலமன், செந்தில்குமார், லெப்டினன்ட் ராஜேந்திரன், லில்லி மற்றும் விலங்கியல் துறை பேராசிரியர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை மதிப்பீடு செய்தனர்.
முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட முதல் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை செஞ்சிலுவை சங்க கல்லூரி ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி செய்திருந்தார்.