தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி உள்பட 20 பேர் வேட்புமனு தாக்கல்

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அமைச்சர் ராஜலட்சுமி உள்பட 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2021-03-17 22:47 GMT
தென்காசி:

தென்காசி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. பெயரில் மேலும் ஒரு வேட்புமனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே இவரது பெயரில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.முகம்மது, சசிகலாவின் தம்பி திவாகரன் கட்சியான அண்ணா திராவிடர் கழகம் சார்பில் முருகன், சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் ஆகியோரும் மனுதாக்கல் செய்தனர்.  

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமி, தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகசெல்வியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் முப்புடாதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். தி.மு.க. சார்பில் வக்கீல் ராஜா மனுதாக்கல் செய்தார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் மகேந்திரகுமாரி, பகுஜன் திராவிட கட்சி சார்பில் எம்.பாலமுருகேசன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். 

வாசுதேவநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மனோகரன் எம்.எல்.ஏ. வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் அவருக்கு மாற்று வேட்பாளராக நந்திதா என்பவர் மனு தாக்கல் செய்தார். தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார் மனு தாக்கல் செய்தார். கடையநல்லூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.முத்துலட்சுமி, புதிய தலைமுறை மக்கள் கட்சி சார்பில் எஸ்.ராஜாராம், சுயேச்சைகளாக ஆர்.ராஜா பொன்னுசாமி, டி.அவனிராஜா, கே.மாரி துரைபாண்டியன், பி.ராஜி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க. சார்பில் பூங்கோதை ஆலடி அருணா எம்.எல்.ஏ. மற்றும் சுயேச்சைகளாக பனங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி நாடார் மற்றும் டி.பூல் பாண்டி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 20 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்