நெல்லையில் வேட்புமனு தாக்கலுக்கு சில்லரை காசுகளுடன் வந்த வேட்பாளர்

நெல்லையில் வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளர் சில்லரை காசுகளுடன் வந்தார்.

Update: 2021-03-17 21:49 GMT
நெல்லை:
நெல்லையை அடுத்த ராமையன்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்ப பாண்டியன். மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவரான இவர், நெல்லை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, மாரியப்ப பாண்டியன் ராமையன்பட்டியில் இருந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மாட்டு வண்டியில் தனது ஆதரவாளர்களுடன் வந்தார்.

அப்போது அவர், வேட்புமனு தாக்கலின்போது டெபாசிட் தொைக செலுத்துவதற்காக ரூ.1, ரூ.2, ரூ.5 போன்ற சில்லரை காசுகளாக மொத்தம் ரூ.5 ஆயிரத்தை சாக்கு மூட்டையில் கொண்டு வந்தார். தொடர்ந்து நெல்லை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் மாரியப்ப பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர், டெபாசிட் தொகை ரூ.5 ஆயிரத்தை சில்லரை காசுகளாக மூட்டையுடன் வழங்கினார்.

இதனை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர், அங்கிருந்த ஊழியர்களிடம் சில்லரை காசுகளை எண்ணி சரிபார்க்குமாறு கூறினார். அந்த சில்லரை காசுகளை ஊழியர்கள் எண்ணி சரிபார்த்தனர்.

மேலும் செய்திகள்