பொம்மலாட்டம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
பொம்மலாட்டம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வலியுறுத்தி நகராட்சி சுகாதார பிரிவு சார்பில் அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இ்ந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சாகுல்ஹமீது (பொறுப்பு) தலைமை தாங்கினார்.
சுகாதார ஆய்வாளர்கள் சரத்பாபு, இளங்கோ, பிச்சைபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொதுமக்கள், பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.