நெல்லையில் பேராசிரியை உள்பட 11 பேருக்கு கொரோனா
நெல்லையில் பேராசிரியை உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய பேராசிரியை ஒருவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் அவர் பணியாற்றக்கூடிய பகுதியில் உள்ள வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 ஆயிரத்து 563 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 9 பேர் குணமடைந்தனர். தற்போது 63 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 214 பேர் இறந்துள்ளனர்.