ரூ.4¼ கோடி மோசடி செய்த ஈமுக்கோழி பண்ணை உரிமையாளருக்கு வலைவீச்சு

ரூ.4¼ கோடி மோசடி செய்த ஈமுக்கோழி பண்ணை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-03-17 21:13 GMT
ரூ.4¼ கோடி மோசடி செய்த ஈமுக்கோழி பண்ணை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈமு கோழிப்பண்ணை
பெருந்துறை அருகே மேட்டுப்புதூரை சேர்ந்தவர் கே.வி.செந்தில்நாதன். இவர் அம்மன் ஈமு கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்தார். அதன்மூலமாக 129 பேரிடம் இருந்து ரூ.4 கோடியே 34 லட்சத்து 13 ஆயிரத்து 500 முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டார். இதுகுறித்து முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்நாதனை கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானார்.
தலைமறைவாக...
 இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில்நாதனை கைது செய்து ஆஜர்படுத்த பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள செந்தில்நாதனை ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

மேலும் செய்திகள்