வாழைப்பந்தல் கிராமத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்
வாழைப்பந்தல் கிராமத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.;
கலவை
வாழைப்பந்தல் கிராமத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டார்.
அப்போது மின்னணு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ‘‘சட்டமன்ற தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். பணத்திற்கும் பொருளுக்கும் வாக்குகளை விற்கக் கூடாது என அறிவுறுத்தி உறுதிமொழி வாசித்தார். அதனை பொதுமக்கள் திரும்பக்கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.