நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி

நெல்லையில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-03-17 20:37 GMT
நெல்லை, மார்ச்.18-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் போலீசார் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதேபோல் நெல்லை அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரி சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. 

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. போலீசார் வரிசையாக நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் அவர்களுடைய குடும்பங்களை சேர்ந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் தடுப்பூசி போட்டனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை அங்கேயே 30 நிமிடம் உட்கார வைத்தனர். பின்னர் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்