அறந்தாங்கி அருகே மாட்டுவண்டி பந்தயம்

அறந்தாங்கி அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

Update: 2021-03-17 19:30 GMT
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே கடையாதுப்பட்டி அரியநாயகி அம்மன் கோவிலில் 33-ம் ஆண்டு மது எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 45 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. 10 கிலோ மீட்டர் பந்தய தூரமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் என 3 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த வண்டிகளுக்கு ரொக்கபணமும், மாடுகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்