புதுக்கோட்டை
இலுப்பூர் அருகே புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற செல்வம் (வயது35). இவர் திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் மாவு மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்த போது எந்திரத்தில் இருந்து செல்வத்தின் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.