வெண்ணந்தூர் அருகே மாட்டு வியாபாரியிடம் ரூ.2¾ லட்சம் பறிமுதல்

வெண்ணந்தூர் அருகே மாட்டு வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-17 19:14 GMT
வெண்ணந்தூர்:
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தநிலையில் நேற்று மதியம் வெண்ணந்தூர் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு பகுதியில் நிலையான கண்காணிப்பு குழுவை சேர்ந்த மதியழகன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது பரமத்திவேலூர் பகுதியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற மினி லாரியை  நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 200 கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினி லாரியில் வந்தவரிடம் விசாரித்ததில் அவர் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த மாட்டு வியாபாரி சிவா (வயது 49) என்று தெரியவந்தது. மேலும் அவர் மாடு வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றதும் தெரிந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள இன்றி கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை ராசிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
========

மேலும் செய்திகள்