முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
லாலாபேட்டை அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாலாபேட்டை
முன்னாள் ராணுவ வீரர்
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே மேலபஞ்சப்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 38). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திருமணாகி பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் குணசேகரன் பஞ்சப்பட்டியில் ஆட்டோ பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார்.
அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட குணசேகரன் கடந்த 15-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு கொண்டார்.
முதலுதவி சிகிச்சை
இதைக்கண்ட குணசேகரனின் மனைவி பிரியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் குணசேகரனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சாவு
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குணசேகரன் பரிதாபமாக இறந்தார்.
இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.