காசி விஸ்வநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்
காசி விஸ்வநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே காகித ஆலை குடியிருப்பில் காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததையடுத்து நேற்று மண்டாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு முதல் காலபூஜை, கலசஆராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.