எல்லப்புடையாம்பட்டி மணவாளன் சாமி ஏரியில் தெப்ப திருவிழா
எல்லப்புடையாம்பட்டி மணவாளன் சாமி ஏரியில் தெப்ப திருவிழா நடந்தது.;
அரூர்,
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டியில் உள்ளது மணவாளன் சாமி ஏரி. இந்த ஏரியின் கரையில் மணவாளன் குட்டை வேடியப்பன் கோவில் உள்ளது. மணவாளன் சாமி ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளது. இந்த நிலையில், எல்லப்புடையாம்பட்டி கிராமமக்கள் சார்பில் மணவாளன் சாமி ஏரியில் தெப்ப திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் கீரைப்பட்டி, கௌாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி, கோணம்பட்டி, புறாக்கல்உட்டை, சுமைதாங்கிமேடு, மாவேரிப்பட்டி, முத்தானூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.