உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு செல்போனில் படம் பிடித்து மிரட்டி மாணவி பாலியல் பலாத்காரம் சிறுவர்கள் 3 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு செல்போனில் படம் பிடித்து மிரட்டி மாணவி பாலியல் பலாத்காரம் சிறுவர்கள் 3 பேர் கைது
உளுந்தூர்பேட்டை
மாணவி பலாத்காரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அருகே உள்ள அரசு மாதிரி பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளது தாய், தந்தை இருவரும் கூலி வேலைக்காக திருவள்ளூர் மாவட்டத்துக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் சிறுமியும், அவளது அக்காவும் தங்கி இருந்து பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்தாள். அப்போது அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவர் சிறுமியிடம் நைசாக பேசி வயலுக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதை அதே பகுதியை சேர்ந்த 15 மற்றும் 18 வயதுடைய சிறுவர்கள் மறைந்து நின்று செல்போனில் படம் பிடித்தனர்.
வலுக்கட்டாயமாக...
பின்னர் வீட்டுக்கு சென்ற சிறுமியிடம் அவர்கள் இருவரும் தாங்கள் செல்போனில் படம் பிடித்ததை காண்பித்து மிரட்டி சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமி அலறினாள்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்தனர். பொதுமக்கள் வருவதை அறிந்து கொண்ட அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
3 பேர் கைது
பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து 15 வயது சிறுவர்கள் உள்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் படம் பிடித்து மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.