குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு
குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது.
கொட்டாம்பட்டி,
மலைப்பகுதியில் இருக்கும் பாம்புகள் இரை மற்றும் தண்ணீர் தேடி மீண்டும் கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் வர தொடங்கியுள்ளது. நேற்று முன் தினம் இரவு கொட்டாம்பட்டி சிவக்களம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. உடனே அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த பாம்பை பிடித்து வனக்காப்பாளர் சங்கப்பிள்ளையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை வலைச்சேரிபட்டி வனப்பகுதியில் விட்டனர்.
கொட்டாம்பட்டி பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த 100-க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை பிடித்து வனப்பகுதிகளில் கொண்டுபோய் விட்டுள்ளனர்.