மருந்து தெளிப்பு பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்
மருந்து தெளிப்பு பயிற்சியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை,
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை பட்டப் படிப்பு பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் தங்கள் கிராமப்புற பணி அனுபவத்திற்காக மேலூர் வட்டார வருவாய் கிராமங்களில் விவசாயிகளுடன் இணைந்து களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, அ.வல்லாளபட்டி கிராமத்தில் பழனிச்சாமி என்ற விவசாயிக்கு சொந்தமான மாந்தோப்பில் மாணவர்கள் சிஜின்ரவி, சுபாஷ், தமிழ்மணி, தருண்சத்ரியா, வசந்த்குமார், ராஜமோகன், நித்திஷ்கண்ணா ஆகியோர் ரசாயன மருந்து தெளிப்பு பற்றியும் அதன் நன்மை தீமைகள் குறித்தும் விளக்கினர்.