கார்களின் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு

ஊட்டியில் கார்களின் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2021-03-17 16:55 GMT
ஊட்டி,

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசராவ்(வயது 39). இவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு காரில் சுற்றுலா வந்தார். பின்னர் தொட்டபெட்டா மலைச்சிகரம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு லோயர் பஜாரில் சாலையோரம் காரை நிறுத்தினார். 

பின்னர் பொருட்கள் வாங்குவதற்காக குடும்பத்தினருடன் கடைக்கு சென்றார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு திரும்பி வந்து பார்த்தபோது, காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் காரின் உள்ளே வைத்து இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், 5 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. 

இதேபோன்று கிண்ணக்கொரையை சேர்ந்த சாம்சன் என்பவர் ஊட்டி கமர்சியல் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் ஓட்டலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, காரில் இருந்த செல்போன் மற்றும் ரூ.37 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த காரின் கண்ணாடியும் உடைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்த புகார்களின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்தந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்