பூத்துக்குலுங்கும் காட்டுத்தீ மலர்கள்

முதுமலை வனப்பகுதியில் காட்டுத்தீ மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.

Update: 2021-03-17 16:35 GMT
கூடலூர்,

கூடலூர், முதுமலை பகுதியில் வறட்சியான காலநிலை நிலவுகிறது. இதனால் மரங்களில் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் கோடைகாலத்தில் மலரக்கூடிய பூக்கள் வனப்பகுதியில் பூத்துக்குலுங்குகிறது. பின்னர் மரங்களில் இருந்து உதிர்ந்து விழுந்து, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.

கூடலூர் அருகே முதுமலை வனத்தில் தற்போது ‘பிளேம் ஆப் தி பாரஸ்ட்’ என்ற மலர்கள் பூத்துக்குலுங்குகிறது. இதை காட்டுத்தீ மலர்கள் என்றும், கிளிமூக்கு பூ என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. 

வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் இவ்வகை மலர்களை சற்று தொலைவில் நின்று பார்க்கும்போது காட்டுத்தீ பரவியபோதுபோல காணப்படும். 

இதை அருகில் நின்று பார்க்கும்போது கிளியின் மூக்கு போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. இதை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வெகுவாக கண்டு ரசித்து செல்கின்றனர்.

இதுகுறித்து தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-
ஜார்கண்ட் மாநிலத்தின் மாநில மலராக பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்கள் விளங்குகிறது. இந்த மலர்கள் செம்மஞ்சள் நிறத்தில் பூக்கிறது. 

தட்டையான விதைகளை உடையது. இதன் மரத்தின் பூ, விதை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவத்திற்கு பயன்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்