போக்குவரத்து விதிகளை மீறிய 391 பேர் கைது

போக்குவரத்து விதிகளை மீறிய 391 பேர் கைது செய்யப்பட்டனர்;

Update: 2021-03-17 16:10 GMT
ராமநாதபுரம் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அதிக வேகத்தில் சென்றதாக 5 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 11 பேர் மீதும், அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக 3பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 207 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 32 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 133 பேர் மீதும் என மொத்தம் 391 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.79 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்