திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 72 ஆயிரத்து 492 பேருக்கு புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 72 ஆயிரத்து 492 பேருக்கு புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை

Update: 2021-03-17 16:03 GMT
திருப்பூர், 
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 72 ஆயிரத்து 492 பேருக்கு புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை விரைவு தபால் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை
திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின் போது 8 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்த வாக்காளர்களுக்கு புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் தயாராகி உள்ளது. இவற்றை அஞ்சல் துறையுடன் இணைந்து தபால் மூலமாக வாக்காளர்களின் முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பணியை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று தொடங்கி வைத்தார்.
அதன்படி தாராபுரம் தொகுதியில் 6 ஆயிரத்து 236 பேருக்கும், காங்கேயத்தில் 7 ஆயிரத்து 266 பேருக்கும், அவினாசியில் 10 ஆயிரத்து 704 பேருக்கும், திருப்பூர் வடக்கு தொகுதியில் 11 ஆயிரத்து 765 பேருக்கும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 8 ஆயிரத்து 977 பேருக்கும், பல்லடம் தொகுதியில் 13 ஆயிரத்து 619 பேருக்கும், உடுமலை தொகுதியில் 7 ஆயிரத்து 734 பேருக்கும், மடத்துக்குளம் தொகுதியில் 6 ஆயிரத்து 191 பேருக்கும் என மொத்தம் 72 ஆயிரத்து 492 பேருக்கும் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படுகிறது.
விரைவு தபால்
விரைவு தபால் மூலமாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக அஞ்சல் துறை அலுவலர்களிடம் புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைக்கப்பட்டது. விரைவில் வாக்காளர்களுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சாகுல் அமீது (பொது), முரளி (தேர்தல்), தேர்தல் தாசில்தார் முருகதாஸ், அஞ்சல் துறை உதவி கோட்ட கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்