கமுதி,
கமுதி அருகே அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் பால்மேலி செல்வம் (வயது20). இவர் அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் (20) ஆகிய 2 பேரும் மோட்டார்சைக்கிளில் அபிராமம் நோக்கி வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் குடிநீர் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பால்மேலி செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.