புளியந்தோப்பில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக அ.தி.மு.க.வினர் மீது வழக்கு - தேர்தல் பறக்கும் படை அதிகாரி புகாரின் பேரில் நடவடிக்கை

புளியந்தோப்பில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக அ.தி.மு.க.வினர் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-03-17 11:55 GMT
திரு.வி.க. நகர், 

சட்டமன்ற பொதுத்தேர்தலில் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் த.மா.காவைச் சேர்ந்த கல்யாணி என்பவரை அறிமுகம் செய்யும் கூட்டம் புளியந்தோப்பு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த பகுதி செயலாளர் சிவகுமார் வைத்திருந்த பேனரில் மாவட்ட பொருளாளரான மகேஷ் என்பவர் தனது பெயர் இல்லை எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு கூட்டணி கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அருகில் இருந்த மற்ற கட்சியினர் இருவரையும் சமாதானம் செய்து மண்டத்திற்குள் அழைத்து சென்றனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த ஜெயக்குமார் வேட்பாளரை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவராமன் கொடுத்த புகாரின் பேரில், புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்