ஆந்திராவில் இருந்து காரில் லிப்ட் கேட்டு கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர்.

Update: 2021-03-17 06:52 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் கவரைப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த காரில் பயணம் செய்த செங்கல்பட்டை சேர்ந்த ஜெரீன் (வயது 20) என்பவரது பையில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து லிப்ட் கேட்டு அந்த காரில் பயணம் செய்தது தெரியவந்தது.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெரீனை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்