மாணவர்களை போன்று அமைச்சர்களுக்கும் நீட் தேர்வு நடத்தலாம் சீமான் பேச்சு

மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்துவது போல் அமைச்சர்களுக்கும் நீட் தேர்வு நடத்தலாம்.

Update: 2021-03-17 05:40 GMT
மதுராந்தகம், 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் (தனி) தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜேஷ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்யூர் பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்துவது போல் அமைச்சர்களுக்கும் நீட் தேர்வு நடத்தலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவம், விவசாயம், வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்