செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் வேட்புமனு தாக்கல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நேற்று முன்தினம் 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் நேற்று மட்டும் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி சோழிங்கநல்லூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் கந்தன் சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி லட்சுமணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருப்போரூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மோகனசுந்தரி, மாற்று வேட்பாளர் உள்பட 2 பேர் திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடந்தும் அதிகாரி சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், மாற்று வேட்பாளர் உள்பட 2 பேர் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி லட்சுமி பிரியாவிடம் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புஷ்பராஜ் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து மாதவனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.